Menu

தமிழ் விழா 2016

 

Fetna-2016-7

 

தமிழ்நாட்டில் மழைவெள்ள மீட்புப்பணி

03, திசம்பர் 2015

Flood Chennai-1Flood Chennai-3

தமிழக மக்கள் பெருமழைப் பேரிடரினால் பெரும் அவதியில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். மீட்புப்பணிகளுக்கு நாம் உதவுவது நமது கடமையாகும். பேரவையின் செயற்குழு ஒருமனதாக பேரவையின் கையிருப்பு நிதியிலிருந்து ஒரு தொகையை உடனடியாக கொடுக்கலாம் என்று முடிவு செய்துள்ளது.
 
வெள்ளப்பெருக்கு பேரிடர் தொடர்ந்து அதிகரித்து வருவதால், மீட்புப் பணிக்கான உடனடித் தேவை அதிகரித்து வருகிறது. நாமும் பெருந்தொகை கொடுத்து மீட்புப்பணிகளில் பங்கேற்பது முறையாகும்.
 
மேலும் தமிழ்நாட்டில் களப்பணியாற்றுவோர்களை கண்டறிந்து செயலாற்ற, ஒரு தமிழக வெள்ளப் பேரிடர் மீட்புப் பணிக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. 
 
பேரவை வங்கி கணக்கு  விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 
FeTNA account and Bank details are given below:
 
Address:
Federation of Tamil Sangam of North America
701 Jackson Road
Silver Spring MD 20904.
 
Bank of America
Checking Account # 2370 1922 8772 , 
Routing # 053000196 
Proof code 56
Swift Code: BOFAUS3N (use it if necessary)
 
அருகில் உள்ள பாங்க் ஆப் அமெரிக்கா (Bank of America) வங்கியில் Deposit Slip-ன் கீழ்ப்பகுதியில் உங்கள் பெயரை எழுதி பணம் செலுத்த வேண்டுகிறோம். காசோலைகளை (Checks) Federation of Tamil Sangam of North America, 701 Jackson Road, Silver Spring MD 20904.என்ற முகவரிக்கு அனுப்பலாம்.
 
வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவைச் செயற்குழு.

--------------------------------------------------------------------------------------------

 

மீட்புப்பணிக்கு நிதியுதவி அனுப்புவது குறித்து...

அன்புடயீர்  வணக்கம்.

தமிழக மக்கள் பெருமழை பேரிடர்களினால் பெரும் அவதியில் சிக்கி தவித்துக் கொண்டிருப்பதை நீங்கள் அறிவீர்கள். மீட்புப் பணிகளுக்கு நாம் உதவுவது நமது கடமையாகும். மீட்புப் பணிக்கான உடனடித் தேவையும், இதைத் தொடர்ந்து மறுசீரமைப்பு தேவைகளும்  அதிகரித்து வருகிறது. நாமும் பெருந்தொகை கொடுத்து மீட்புப்பணிகளில் பங்கேற்பது முறையாகும்.

இதுகுறித்து கலந்துரையாட பல்வழி அழைப்பு ஏற்பாடு செய்யப்பட்டு, இந்த அறச்செயலுக்கு எப்படி நிதிதிரட்டுவது என்றும் அதை எப்படி சரியான வழியில் மீட்புப் பணிக்குப் பயன்படுத்துவது என்பது குறித்தும் பேசி முடிவு   செய்யப்பட்டது. அதன் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:

1. பேரவை வழியாக மீட்புப்பணிக்கு நிதியுதவி அனுப்ப விரும்புவர்கள், பேரவை இணையத்தளத்தில் கொடுக்கப் பட்டிருக்கும் தகவலை பயன்படுத்தி, நிதியைப் பேரவைக்கு அனுப்ப வேண்டுகிறோம்.  http://www.fetna.org/ பேரவை மீட்பு நிதியுடன் நீங்கள் அனுப்பும் நிதியும் சேர்த்து, மீட்புப் பணியாற்றும் அரசு அங்கிகாரம் பெற்ற தொண்டு நிறுவனத்திற்கு அனுப்பி, நாம் கூறும்படி நேரடியாக மீட்புக்களப்பணிக்குப் பயன்படுத்தப்படும். நிதியனுப்பிய தமிழ்ச்சங்கத்தின் பெயர் பேரவை இணையத்தளத்தில் போடப்படும்.

எடுத்துக்காட்டு: தமிழ்நாடு அறக்கட்டளைக்கு அனுப்பி அவற்றை நாம் வேண்டியப்படி மீட்புப்பணிக்கு செலவிடப்படும். எப்படி யார்வழியாக மீட்புப்பணிக்கு செலவிட வேண்டுமென்று தமிழ்ச்சங்கங்கள் பரிந்துரைக்கலாம்.

2. தமிழ்ச்சங்கங்கள் நேரடியாக FCRA- அங்கீகரிக்க‌ப்பட்ட தொண்டு நிறுவனங்களுக்கு அனுப்பி மீட்புக் களப்பணிக்கு ஆவனச்செய்யலாம். உங்களின் சேவைத் தகவல்களை பேரவை இணையத்தளத்தில் நீங்கள்விரும்பினால் பதிவுச் செய்யலாம். உங்களுக்கோ உங்கள் நண்பர்களுக்கோ பணியாற்றுபவர்களுடன் நேரடியான தொடர்பு இருத்தல் நல்லது.

3. இங்கிருக்கும் வணிக நிறுவனங்கள் வழியாக, தமிழகத்தொண்டு நிறுவனங்களுக்கு நாம் கூறும் பொருட்களை வழங்கவும் ஏற்பாடுகள் நடந்துகொண்டிருக்கிறது. நீங்களும் இதில் பங்கேற்கலாம்.

எடுத்துக்காட்டு: வால்மார்ட்  வழியாக தமிழகத்தில்பொருள்கிடைக்கஏற்பாடுசெய்யலாம். திரு.பொற்செழியனை( This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ) தொடர்புகொள்ளலாம்.

4. கப்பல். விமானம் வழியாக பொருள் அனுப்புவதில் பல சிக்கல்கள்உள்ளது. அனுப்பும் செலவு, பொருட்களை எடுப்பதிலுள்ள கெடுப்பிடிகள், கொண்டு போகவண்டி செலவு, கிடங்கு செலவு, பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான முறையில் பகிர்ந்தளிக்கும் பணி, போக்கிரிகள்/கட்சிகாரர்கள் தலையீடுகள் என தொல்லைகள் பல அடங்கும். பயன்படுத்திய பொருள்களை யாரும் சீண்டுவதில்லை.

5. விருப்பமுள்ளவர்கள்முதலமைச்சர்நிவாரணநிதிக்கும் (Chief Minister’s Relief Fund) பணத்தைஅனுப்பலாம்.

6. விருப்பமுள்ளவர்கள்ரெட்கிராஸ் (Red Cross), ரோட்டரிகிளப் (Rotary Club), லயன்ஸ்கிளப் (Lions Club) போன்றதொண்டுஅமைப்புகளுக்கும்நிதியனுப்பலாம்.

7. தமிழகத்தில் சில தொண்டு நிறுவனங்களுக்கும்  அறக்கட்டளைகள் மூலமாகவும் உதவிகள் செய்யலாம். மேலும்  தகவல்களுக்கு   முனைவர் தண்டபாணி ( This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ) திரு .வேலு ராமன் ( This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ), முனைவர் பழனிசுந்தரம் ( This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. ) ஆகியோர்களைஅணுகலாம் .

8. தமிழகத்தில்  மக்கள் பணியாற்றும் நல்ல தனிநபர்களுக்கும் நிதியுதவி அளிக்கலாம்.

எடுத்துக்காட்டு: அய்யா பொன்ராஜ், அய்யா சகாயம், அய்யா பூவுலகம் சுந்தரராஜன், அய்யா இளங்கோவன் சந்தானம், அய்யா எழிலன் மேகநாதன் மற்றும் பலர்.

9.பேரவைஇதுமாதிரியானபேரிடர்களுக்காகஒருநிதிசேர்த்துவைத்துக்கொள்ளவேண்டுமென்றதிட்டமும்வந்துள்ளது.

10. பேரவையைதமிழகத்திலும் FCRA அங்கிரிக்க‌ப்பட்ட தன்னார்வத் தொண்டு அமைப்பாக பதிவு செய்ய வேண்டும் என்ற பரிந்துரையும் வந்துள்ளது.

உங்களிடம் வேறு நல்ல திட்டங்கள் இருந்தால், பேரவையுடன் பகிர்ந்து கொள்ளவேண்டுகிறோம். தொண்டு நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து உதவிகள் பெறுவது குறித்த விதிமுறைகள் (FCRA) குறித்த ஒரு பேட்டி/கணொளி வரவிருக்கிறது.

தொண்டு நிறுவனங்கள்  மற்றும் களப்பணிஆற்றுவோரின் தொடர்புகள் நீங்கள் வேண்டினால்  உங்களுக்கு அளிக்க‌ப்படும். ( This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. )

நன்றி,

நாஞ்சில்பீற்றர்

தலைவர், வடஅமெரிக்கத்தமிழ்ச்சங்கப்பேரவை.

பேரவைச்செயற்குழுவிற்காக‌

301 573 8574

குறிப்பு:

மேலேகொடுக்கப்பட்டுள்ளவிவரங்கள்  அனைத்தும் பலதரப்படதகவல்கள் அடிப்படையில் தொகுக்கப்பபட்டுள்ளது . இவற்றை சீர்தூக்கிபார்த்து, உங்கள் தமிழ்ச்சங்கங்களின் விருப்பத்திற்கேற்ப செயல்படுமாறு வேண்டுகிறோம் .

Aruvi Magazine

  • 112011.png
  • 120112.jpg
  • aruvi-dec-2010.png
  • aruvi-jan-2012.png
  • aruvi-june-2011.png
  • aruvi-march-2011.png
  • aruvi-may-2012.png
  • aruvi-may-2013.jpg
  • aruvi-oct-2011.png
  • aruvi-sep-2013 1.jpg

News and Announcements News, Videos, Pictures, Announcements and More

Calender

Media Gallery