Federation of Tamil Sangams of North America (FeTNA)

A+ A A-

Message from the President Featured

Rate this item
(8 votes)
அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய வட அமெரிக்கத் தமிழ்ச் சொந்தங்களே,

 

வணக்கம்!
தமிழால் இணைவோம்!

 

பெருமை மிக்க வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் வெள்ளிவிழா ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறோம். கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக அமெரிக்க மண்ணில் நம் மொழியையும், பண்பாட்டையும், கலைகளையும் காக்கின்ற பெரும்பணியை நமக்கு முன்னே இப்பேரவைக்கெனப் பணியாற்றிய மாண்பாளர்கள் செய்துவந்திருக்கிறார்கள். உங்கள் அனைவரது சார்பிலும் அவர்களுக்கு நம் நன்றியைத் தெரிவிக்கும் இவ்வேளையில் அவர்கள் ஆற்றிய பணியை மேன்மேலும் ஓங்கச் செய்வோம் என்று நாமனைவரும் உறுதி பூணுவோம்.

 

இசை, அறிவியல், கலை, வாழ்வியல் என்று அனைத்துத் தளங்களிலும் தமிழர்களிடம் உள்ள எண்ணற்ற அறிவுக் கருவூலங்களை உலகத்தவர் அறிந்து போற்றும் நல்வாய்ப்பினைப் பெற்றிருக்கிறோம். குறிப்பாக வட அமெரிக்காவிலும், ஏனைய நாடுகளிலும் புலம்பெயர்ந்திருக்கும் தமிழர்கள் தங்களுடைய மொழிப்பற்றினாலும் மொழியறிவினாலும் தங்களுக்கு வாய்த்திருக்கும் புதிய தொழில்நுட்ப வசதிகளாலும் இன்று தமிழை உலகமறியச் செய்துவருகிறார்கள். அவர்களுக்கு உணர்வூட்டி, உறுதுணையாயிருந்து தமிழ்ப்பணியாற்றுகிறது வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை.

 

பேரவையின் வெள்ளிவிழாவை வரும் ஜூலை மாதம் 6ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை பால்டிமோரில் கொண்டாடவுள்ளோம். இவ்விழாவில் தாங்களும், தங்கள் குடும்பத்தினர், நண்பர்களும் திரளாக வந்து கலந்துகொள்ளுமாறு அன்போடு வேண்டுகிறேன். வணிக அமைப்புகள், மொழியுணர்வாளர்கள், புகழ்பெற்ற கலைஞர்கள், தொழில்நுட்பவியலாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள் என்று நம் வாழ்வை மேம்படுத்த உழைக்கும் அனைத்துத் தரப்பினரையும் சந்திக்கும் ஒரு அரிய விழாவை உங்கள் வருகை இன்னும் சிறப்பாக்கும். நீங்கள் தொழில் முனைவோராக இருந்தால் உங்கள் வணிகத்தைப் பெருக்க இந்த வெள்ளிவிழா ஒரு சிறந்த வாய்ப்பு. அதனைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு உங்களை வேண்டுகிறேன்.

 

இந்த வெள்ளிவிழா வட அமெரிக்கத் தமிழர்களின் மேன்மையையும், ஒற்றுமையையும், தமிழ்ப்பணியையும் உலகினருக்கு எடுத்துக் காட்ட ஒரு அருமையான தருணம். எனவே நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயலாற்றி இவ்விழாவைச் சிறப்புறச் செய்வோம், வாருங்கள் என்று அன்போடு அழைக்கிறேன்.

 

வாழிய செந்தமிழ்! வாழ்க நற்றமிழர்!

 

அன்புடன்,

 

கு. தண்டபாணி

 

தலைவர்

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை

Last modified on
More in this category: New Website Launch »

1 comment

  • தெய்வ கண்ணையன் கணேசன்

    பால்ட்டிமோர் சமூக அரங்கில் (The Baltimore Convention Center) நடைபெற இருக்கும் தமிழறிஞர் முனைவர் மு.வரதராசனார் நூற்றாண்டு விழாவாக மலர இருக்கும் பேரவையின் வெள்ளிவிழாவிற்கு வாழ்த்துக்கள் ! புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகளோடு அன்பன் தெய்வ கண்ணையன் கணேசன் / கோயம்புத்தூர்

    Report தெய்வ கண்ணையன் கணேசன் Comment Link

Leave a comment

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

registeroninenow

FeTNA 2013 in Toronto

Due to popular demand 10% discount extended till May 15! 

location-dates-web

Copyright © 2011 Federation of Tamil Sangams of North America (FeTNA). All Rights Reserved.

A Registered, Non-Profit, Tax-Exempt 501(c)(3) Organization.

Legal Disclaimer: The information contained in this website is for general guidance on matters of interest only.
FeTNA is not legally responsible for any material content or for any inaccuracies in this website.

External links are provided for reference purposes. The World News II is not responsible for the content of external Internet sites.
Template Design © Joomla Templates | GavickPro. All rights reserved.

Login or Register

LOG IN