வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை (FeTNA)
வெள்ளிவிழா மாநாடு, 6-7 ஜூலை 2012, பால்டிமோர், மேரிலாந்து
விஜய் தொலைக்காட்சி சிவகார்த்திகேயன் நடத்தவிருக்கும்
புதுமையானதொரு நிகழ்ச்சி – “தர்க்க மேடை”
கலந்துரையாட அன்புடன் அழைக்கிறோம்.
அன்பான தமிழ் நெஞ்சங்களே!
பேரவையின் 25வது ஆண்டு தமிழ்மாநாடு சிறப்பாக நடக்க ஒருங்கிணைப்புப் பணிகள் எழுச்சியுடன் நடந்து வருகின்றன. பேரவை வரலாற்றில் முதல்முறையாக இந்த ஆண்டு ”தர்க்க மேடை” என்றதொரு புதுமையான நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்படவிருக்கிறது.உங்கள் அபிமான தொலைக்காட்சி/திரைப்பட நட்சத்திரமான சிவகார்த்திகேயனுடன்இணைந்து செயல்பட அரியதொரு வாய்ப்பு.
தாயகங்களிலிருந்து அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்த தமிழர்கள், அமெரிக்காவிலேயே பிறந்து வளரும் அமெரிக்கத் தமிழ்ப்பிள்ளைகள், அமெரிக்காவில் வாழும் தம் பிள்ளைகளையும் பேரக்குழந்தைகளையும் காண தற்காலிகமாக அமெரிக்காவிற்கு வந்திருக்கும் தாத்தா-பாட்டியர்என மூன்று தலைமுறையினரும்கலந்து கொள்ளுமாறு இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்படவிருக்கிறது.
அனைவருக்கும் பயனுள்ள, ஆர்வமூட்டும் வண்ணம் தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றன. எடுத்துக்காட்டாக கீழே சில மாதிரித் தலைப்புகள் அளிக்கப் பட்டுள்ளன.
- 1.அமெரிக்காவில்வளரும்குழந்தைகள்தமிழ்மொழியைகற்பதுஅவசியமா?
- 2.அமெரிக்காவில்வளரும்குழந்தைகளுக்குஏன்தமிழ்பேசத்தெரிவதில்லை?
- 3.தமிழ்ப்பண்பாடு, அமெரிக்கப்பண்பாடுஇரண்டும்முரண்பட்டவையா?
உங்களுக்குத் தோன்றும் தலைப்புகளையும் அனைவரும் அனுப்பி வைக்கலாம். மூன்று தலைமுறையினரும் மூன்று வெவ்வேறு குழுக்களில் அமர்ந்து தமக்கு மனதுக்குத் தோன்றும் கருத்துகளைத் தெரிவிக்கலாம். இதை ஒரு நகைச்சுவை நிறைந்த கலந்துரையாடலாக திரு. சிவகார்த்திகேயன் நடத்தி வைப்பார். அமெரிக்க மண்ணில் பிறந்து வளரும் பிள்ளைகள் மட்டுமே ஆங்கிலத்தில் பேச அனுமதிக்கப்படுவர்.
இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைக்கும் குழு உங்களிடம் முன்வைக்கும் இரண்டு வேண்டுகோள்கள்: 1. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்குப் பெயர்களை உடனடியாகப் பதிவு செய்யுங்கள். அத்துடன் மாநாட்டுக்கும் உங்கள் பெயர்களை உடனடியாகப் பதிவு செய்யுங்கள். 2. ஆர்வத்தையும் அதே நேரத்தில் சிந்தனையையும் தூண்டும் தலைப்புகளை எழுதி அனுப்புங்கள்.
நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
அனுப்ப வேண்டிய இறுதிநாள்: மே மாதம் 30, 2012
(இரா. மனோகரன்- தொலைபேசி எண்: 267-421-2891)
