சிவகார்த்திகேயன் இன்றைய தொலைக்காட்சிக் கலைஞர்கள் உலகில், மாபெரும் வெற்றியாளனாக வலம் வரும் விண்மீன் இவர். நாதசுவரக் கலைஞர் தாமரைத்திரு விருது பெற்றவருடைய பெயரன். சிவகங்கையச் சார்ந்த இவர், விஜய் தொலைக்காட்சியின் ‘கலக்கப்போவது யாரு’ எனும் நிகழ்ச்சியின் மூலம் கலையுலகுக்கு அறிமுகமாகி, இன்று தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலைஞராக, தொகுப்பாளராக, திரைப்படக் கலைஞராக, நகைச்சுவை நடிகராக, நாட்டியக்கலைஞராக எனப் பல்சுவைக் கலைஞராகத் திகழ்பவர். மெரினா, கழுகு, மூணு, மனம் கொத்திப் பறவை, இரண்டாம் உலகம், பிருந்தாவனம்லோ நந்தகுமாரடு முதலான திரைப்படங்களில் நடித்து உள்ளார். விஜய் தொலைக்காட்சியின், “ஜோடி நெம்பர் ஒன்” எனும் நிகழ்ச்சியின் மூலம் புகழ் உச்சிக்குச் சென்ற இவர், அதே தொலைக்காட்சியில் “அது இது எது” எனும்…