Federation of Tamil Sangams of North America (FeTNA)

Switch to desktop Register Login

Rate this item
(0 votes)

திரைப்பட நடிகர் பரத்

தமிழ்த் திரைப்படங்களின் இளம் முன்னணிக் கதாநாயகர்களுள் ஒருவர்தான், ‘சின்ன தளபதி’ பரத். திருச்சிராப்பள்ளியில் பிறந்த இவரது பெயர் பரத் சீனிவாசன் என்பதாகும். நடனப் பள்ளியில் சேர்ந்து முறையாக நடனம் கற்று, தனது பதினோராவது வயதிலேயே தன் நடனத்தால் பார்ப்போரை தன்வசம் ஈர்த்து வந்திருக்கிறார். ஆடல் நிகழ்ச்சியின் ஒன்றின் போது இவரது நடனத்தைக் கண்டு ஈர்க்கப்பட்ட இயக்குநர் சங்கர் தன் படமான, ‘பாய்சு’ எனும் தமிழ்த் திரைப்படத்தில் இவரை அறிமுகப்படுத்தினார்.


‘பாய்சு’ தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகக் கதாநாயகர்களாக நான்கு பேர் அறிமுகமாகியிருந்தனர். அவர்களுள் வெகுவாக முன்னேறி, பல வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணிக்கு வந்தவர் இவர் மட்டுமே. இவர் நடித்த படங்களுள், ’பாய்சு’, ‘செல்லமே’, ’காதல்’, எம்டன் மகன்’, ’வெயில்’ முதலானவை மகத்தான வெற்றிப் படங்களாகும். தமிழக அரசின் ‘கலைமாமணி’ விருது உட்பட பல விருதுகளைப் பெற்ற பரத், ‘சின்ன தளபதி’ என்றும் தன் இரசிகர்களால் அழைக்கப்பட்டு வருகிறார். இவர் நன்றாக ஆடவும் பாடவும் கூடியவர். தமிழ்த் திரைப்படங்களில் சில பாடல்களைப் பாடியும் உள்ளார்.


இவர் நடித்த மற்ற திரைப்படங்கள் The People,அழகாய் இருக்கிறாய் பயமாய் இருக்கிறது, ஆறுமுகம், கண்டேன் காதலைதிருத்தணி, அரவான், கூடல் நகர், பழனி, யுவன் யுவதி, வானம் மற்றும் சேவல் போன்றவை.



Last modified on Friday, 01 June 2012 23:57

Leave a comment

வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துகள் ஆசிரியர் குழுவின் பார்வைக்கு பிறகே வெளியிடப்படும். வாசகரின் கருத்துக்கான முழுப் பொறுப்பும் அவரையே சாரும். நாகரீகமற்ற வார்த்தைகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கும்படி வாசகர்களைக் கேட்டுக்கொள்கிறோம். தனி நபர் தாக்குதலை, கட்டுரைகளுக்குப் பொருத்தமில்லாத கருத்துகளை வாசகர்கள் இங்கே இடவேண்டாம். வாசகர்களின் கருத்துச் சுதந்திரத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்தப் பகுதியைத் தவறாக பயன்படுத்த வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறோம். நாகரீகமற்ற கருத்துகள் குறித்து எங்கள் கவனத்துக்கு கொண்டுவந்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Copyright © 2011 Federation of Tamil Sangams of North America (FeTNA). All Rights Reserved. A Registered, Non-Profit, Tax-Exempt 501(c)(3) Organization. Legal Disclaimer: The information contained in this website is for general guidance on matters of interest only. FeTNA is not legally responsible for any material content or for any inaccuracies in this website.

Top Desktop version