தமிழ் திரைப்பட நடிகர், நாடகக் கலைஞர், நிகழ்ச்சித் தொகுப்பாளர், நாட்டியக் கலைஞர் எனப் பல ஆற்றல் கொண்டவர் பிரியதர்ஷினி ஆவார். சன் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளுக்குத் தொகுப்பாளராகத் தொடர்ந்து பணியாற்றி வருகிறார். ’புலி வருது’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்துள்ளார். அண்மையில் ‘மானாட மயிலாட’ எனும் தொடர் நிகழ்ச்சியில் முதல் பரிசினை வென்றிருக்கிறார். விஜய் தொலைக்காட்சியின் நடன நிகழ்ச்சித் தொடரிலும் ‘சிறந்த நடனக் கலைஞர்’ விருதினைப் பெற்றிருக்கிறார். முதன் முதலாக, 1998ஆம் ஆண்டு பொதிகை தொலைக்காட்சியின் ’விழுதுகள்’ நெடுந்தொடரில் தன் கலை வாழ்க்கையைத் துவங்கிய இவர், ‘கோலங்கள்’, ’ரேகா அய்.பி.எசு’ உள்ளிட்ட பல நெடுந்தொடர்களிலும் நடித்துள்ளார். வளர்ந்து வரும் முன்னணி நடிகரும், தொலைக்காட்சி நடிகரும், நாட்டியக் கலைஞருமான திவ்யதர்ஷினி இவரது உடன் பிறந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
