Federation of Tamil Sangams of North America (FeTNA)

A+ A A-

Admin

  • ஏப்ரல் 5, 2013
  • அன்புடையீர், வணக்கம்!
  • தமிழர் நலம் ஒன்றையே முதன்மையாகக் கொண்டு இயங்கிவரும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் ஆண்டு விழாக்கள் இதுகாறும் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்தன. ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க விடுதலை நாளான ஜூலை 4ஆம் தேதியை ஒட்டிய வாரயீற்று விடுமுறையிலேயே இவ்விழாக்கள் கடந்த 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகின்றன. குறிப்பாக, கட்டுண்டு கிடக்கும் தமிழினம் தமது உரிமைகளைப் பெற்றிட வேண்டும் என்பதும் அமெரிக்க விடுதலை நாளில் நாம் நம் விழாவை நடத்துவதன் ஒரு காரணியாகும்.. .

  • கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்காவில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த இந்த விழாவை முதன்முறையாக கனேடிய மண்ணில் கொண்டாட ஏற்பாடுகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. இவ்விழாவினை நடத்த விருப்புக் கோரிய நமது உறுப்பினர் சங்கமான கனேடிய தமிழர் பேரவைக்கு (CTC) நமது பேரவை கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்நிலையில, பேரவையில் கடந்த ஆண்டு உறுப்பினராக இருந்த கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT) யானது, கரும்புலிகள் நாளில் நடக்க இருக்கும் களியாட்டமெனச் சொல்லி, தொன்றுதொட்டு நிகழ்ந்து வரும் பேரவையின் தமிழ்ப் பண்பாட்டு நிகழ்வினைப் புறக்கணிக்கக் கோருவது பேரவை விழாவுக்குக் களங்கம் ஏற்படுத்தக் கூடியதும் மிகவும் வருந்தத்தக்கதுமாகும். தமிழிசை, தமிழிலக்கியம், தமிழ்ப்பண்பாடு, மரபு பேணுதல், புலம் பெயர்ந்த மண்ணில் தமிழ்க்கல்வி உள்ளிட்ட பல விழுமியங்களை உள்ளடக்கியதுதான் பேரவை நடத்தி வரும் தமிழ்விழாவின் மையக்கூறுகள் என்பதையும் வலியுறுத்திச் சொல்லக் கடமைப்பட்டிருக்கிறோம்.

  • ஈழம் உள்ளிட்ட தமிழர் உரிமைகளைக் காக்கும் நோக்கத்தில் செயல்படும் பேரவையின், கடந்த 25 ஆண்டு கால விழாக்களில்அரங்கேறிய ஒட்டுமொத்த நிகழ்ச்சிகளையும், விழாவுக்கு அழைத்திருந்த விருந்தினர்களையும் சீர்தூக்கிப் பார்க்குமாறு அனைவரையும் பேரவை வேண்டுகிறது. இவ்விபரங்கள் யாவும் பேரவையின் இணையதளத்திலே யாவரும் பார்க்குமாறு கிடக்கின்றன. உலகெங்கும் நிகழும் தமிழின எழுச்சிக் குரல்களுக்குத் தனது ஆதரவைத் தொடர்ந்து பேரவை நல்கும் என்பதில் யாருக்கும் எவ்வித ஐயமும் இருக்கலாகுமா? அண்மையில் இடம் பெற்ற தாய்த்தமிழக எழுச்சிகளிலும், தமிழ்நாட்டு அரசின் முயற்சிகளுக்கும் தொடர்ந்து தம் ஆதரவினை அளித்தும் வருகிறது பேரவை. இனத்தின் வலிவை மீளக் கட்டியெழுப்ப வேண்டிய இந்தத் தருணத்தில் நமக்குள்ளே வேறுபாடுகளை உண்டாக்கிக் கொள்ள வேண்டாம் என்று அன்போடும் உரிமையோடும் பேரவை வேண்டுகிறது.

  • தமிழர்களும் தமிழ் அமைப்புக்களும் தங்களுக்குள் எத்தனை வேறுபாடுகள் இருந்தாலும் அர்ப்பணிப்புடன் ஈழ மக்களின் உரிமைக்காக ஒருமித்த குரல் எழுப்புவார்கள் என்ற செய்தியை உலகிற்கு ஓங்கிப் பறைசாற்ற, "எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே" என்ற பாவேந்தர் பாரதிதாசனின் வரிகளுக்கமைய, வரக்கூடிய இந்தப் பேரவை விழாவை ஒன்றுகூடி நடத்த உலகெங்கும் பரந்திருக்கும் தமிழமைப்புகள் ஒன்று திரள வேண்டும் என்பது எமது அவாவும், வேண்டுதலுமாகும்.

  • கனடியத் தமிழர் தேசிய அவை என்ற நமது தோழமை அமைப்பு, பேரவையின் அங்கத்தில் இருந்த ஒன்று. எனவே தமிழர் நலன்களே தம் குறிக்கோள் என்று பாடுபடும் வட அமெரிக்க தமிழ் சங்க பேரவையின் பெருவிழாவைச் சிறப்புற நடத்தி முடிக்கக் கனடிய தமிழ் உறவுகள் ஒவ்வருவரினதும் ஒத்துழைப்பை அன்போடு வேண்டி நிற்கின்றோம்.

  • ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு, நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவர்க்கும் தாழ்வே!
  • இப்படிக்கு
  • வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை

2013 பேரவை மாநாடு

Published in Press Release

2013 தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ்த் திருவிழா! வருக! வருக!!

 

தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவாக மலர இருக்கும் நமது பேரவையின் 26‍-வது தமிழ்த் திருவிழா கனடாவின் டோரோண்டோ நகரத்தில் சோனி (Sony Centre for Performing Arts) அரங்கத்தில் வரும் சூலைத் திங்கள் 5 முதல் 7 வரை நடைபெற உள்ளது.   பெட்னா (FeTNA) தமிழ்த் திருவிழாவை கனடியன் தமிழ் காங்கிரஸ் (Canadian Tamil Congress) பொறுப்பேற்று நடத்துகின்றது.  

 

எதிர்வரும் நம் பேரவையின் ஆண்டுவிழா,  வழக்கமான விழாவாக அல்லாமல் புதுவரலாறு படைக்கும் ஒரு விழாவாக, முதன்முறையாக ஐக்கிய அமெரிக்காவுக்கு வெளியே நடைபெறவுள்ளது. உலக அளவில் பல்வேறு நாடுகளிலிருந்தும் தமிழ் அறிஞர்களும், இலக்கியவாணர்களும், ஆராய்ச்சியாளர்களும், தமிழ்ப் பேராசிரியர்களும், தமிழ்ப் படைப்பாளிகளும், திரைப்பட கலைஞர்களும், அரசியல் தலைவர்களும் கலந்து கொள்ளவிருக்கிறார்கள். முப்பெரும் தமிழான இயல், இசை, நாடக நிகழ்ச்சிகள் உண்டு.  தமிழிசை மற்றும் மெல்லிசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடுகள் நடந்து கொண்டிருக்கின்றன. 

 

சேவியர் தனிநாயகம் அடிகளார் பற்றி அறிந்து கொள்ள பின்வரும் சுட்டிகளைப் படியுங்கள்:

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%A4%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D

 

 

http://thesamnet.co.uk/?p=39733

 

http://www.hindu.com/2003/08/27/stories/2003082704130600.htm

 

                                                                                                          

வாசிங்டன்வட்டாரத்தமிழ்ச்சங்கம்,

வடஅமெரிக்கத்தமிழ்ச்சங்கப்பேரவை

 ஆகியஅமைப்புகள்இணைந்துநடத்தும்

பன்னாட்டுமாநாடு: புறநானூறு

வாசிங்டன்வட்டாரம், மேரிலாந்து,

ஆகஸ்டு 31, 2013 – செப்டம்பர் 2, 2013

சிந்திக்கவைக்கும்சொற்பொழிவுகள் (தமிழிலும், ஆங்கிலத்திலும்), பல்லூடகவிநாடிவினாவிடை, மாணவர்களுக்கானபோட்டிகள், கட்டுரைப்போட்டி, புறநானூறுதழுவியநாடகம், நாட்டியம், இன்னிசைமற்றும்உள்ளத்தைக்கவர்ந்துதமிழ்உணர்வைப்பெருக்கும்சுவையானகலைநிகழ்ச்சிகள்!

(மேலதிகவிவரங்களுக்குwww.classicaltamil.orgஎன்றஇணையதளத்தைப்பார்க்கவும்)

தமிழனின்வரலாற்றுப்பெட்டகம்புறநானூறு!

உலகவரலாற்றிலேபுறநானூற்றுக்கானமுதல்பன்னாட்டுமாநாடு!

வருக, வருகஎன்றுஅனைவரையும்அன்புடன்அழைக்கிறோம்!

FETNA 2013

Published in FeTNA 2013

 

2013 தமிழ்ச்சங்கப் பேரவையின் தமிழ்த் திருவிழா! வருக! வருக!!

 

சேவியர் தனிநாயகம் அடிகளார்

 

தமிழறிஞர் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டு விழாவாக மலர இருக்கும் நமது பேரவையின் 26‍-வது தமிழ்த் திருவிழா கனடாவின் டோரோண்டோ நகரத்தில் சோனி (Sony Centre for Performing Arts) அரங்கத்தில் வரும் சூலைத் திங்கள் 5 முதல் 7 வரை நடைபெற உள்ளது.   பெட்னா (FeTNA) தமிழ்த் திருவிழாவை கனடியன் தமிழ் காங்கிரஸ் (Canadian Tamil Congress) பொறுப்பேற்று நடத்துகின்றது.  

 

Federation of Tamil Sangams of North America (FeTNA) expresses its heartfelt condolences to the victims of the Wisconsin Sikh Temple shooting. As a representative of Tamils living in North America, FeTNA is saddened to hear about the shooting that tragically took seven lifes in the Wisconsin Sikh Guruduwara.
 
Our hearts go out in sorrow to the families and friends of those who were killed and wounded during the terrifying incidence. We stand in solidarity with the Sikh brothers and sisters, and this horrifying incidence reminds us of our obligation to spread the message of peace, love and harmony at the grass-root level.

With deepest sympathy,
 
Dhandapani  Kuppuswamy, Ph.D.
President, FeTNA

PeriyaMaruthuVeerathaiVeluNachiAndChinnaMaruthu

கடந்த இருபத்து ஐந்து ஆண்டுகளாக வட அமெரிக்காவில் இருக்கிற தமிழ்ச்சங்கங்களின் ஒன்றியமாய் ‘வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவை இயங்கி வருகிறது. இந்த அமைப்பின் வெள்ளி விழா, மேரிலாந்து மாகாணத்தில் இருக்கிற பால்டிமோர் நகரில் 2012 ஜூலை 5ஆம் நாள் துவக்கம் ஏழாம் நாள் வரை வெகு கோலாகலமாகக் கொண்டாடப்பட்ட்து. இவ்விழாவில் கிட்டத்தட்ட 2400 பேர் வரையிலான தமிழர்கள் கலந்து கொண்டனர்.

பேரவையானது, தான் நடத்தும் ஒவ்வோர் அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவையும் தமிழறிஞர்களுக்குச் சிறப்புச் செய்யும் விதமாய் அவர்தம் நினைவாக விழாவைக் கொண்டாடி வருகிறது. அவ்வரிசையில், 2012ஆம் ஆண்டுத் திருவிழா மற்றும் பேரவை வெள்ளி விழாவினை முனைவர் மு.வரதராசனார் ஆண்டு விழாவாக அறிவித்துச் சிறப்பித்தது. இத்தகைய விழாவின் இயன்மொழியாக, “தமிழால் இணைவோம்! செயலால் வெல்வோம்!!” எனும் வாசகம் கடைபிடிக்கப்பட்டது.

வெள்ளிவிழாவின் ஓர் அங்கமாகத் தமிழிசை விழா இடம் பெற்றது. அமெரிக்கத் தமிழ்த் திருவிழாவின் ஒரு பகுதியாகத் தமிழிசை விழாக் கொண்டாடுவது இதுவே முதன்முறையாகும். ஜூலை மாதம் ஐந்தாம் நாள் மாலையில், தோழர் நல்லகண்ணு, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், எழுபது கவனகர் முனைவர் கலை.செழியன் ஆகியோர் முன்னிலை வகிக்க, இவ்விழா மூன்று மணி நேரத்தில் வெகு சிறப்பாக நடந்தேறியது.

thozharNallakannu

அன்று மாலை, கொடையாளர்களும் வெள்ளி விழா விருந்தினர்களும் கலந்து கொண்ட வரவேற்பு நிகழ்ச்சி இடம் பெற்றது. இந்நிகழ்ச்சியில், தோழர் நல்லகண்ணு, தமிழறிஞர் மறைமலை இலக்குவனார், மலேசியாவின் பினாங்கு மாகாணத்தின் துணை முதல்வர் முனைவர் இராமசாமி பழனிசாமி, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இலக்கியவாதி தமிழச்சி தங்கபாண்டியன், முனைவர் கலை.செழியன், நாட்டாரியல் ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக், திரைப்படக் கலைஞர்கள் பரத், அமலாபால், ‘வீரத்தாய் வேலுநாச்சியார்’ நாட்டிய நாடக்க்குழுவைச் சார்ந்த இயக்குநர் ஸ்ரீராம் சர்மா மற்றும் மணிமேகலை சர்மா, சின்னதிரைக் கலைஞர் பிரியதர்ஷினி உள்ளிட்ட பலர் அறிமுகவுரை ஆற்றினர்.


presidentDhandapaniKuppusamyAndMunaivarMaraimalaiIlakuvanar

விழாவின் முதல்நாள் நிகழ்ச்சி, 2012 ஜூலை மாதம் 6ஆந் தேதி காலை 8 மணிக்குத் துவங்கியது. மங்கல இசை, அமெரிக்க நாட்டுப்பண், தமிழ்த்தாய் வாழ்த்து, குத்துவிளக்கேற்றுதல் ஆகியவற்றுக்குப் பின்னர், பேரவைத் தலைவர் முனைவர் தண்டபாணி குப்புசாமி, வெள்ளி விழா ஒருங்கிணைப்பாளர் திரு.பாலகன் ஆறுமுகசாமி ஆகியோர் வந்திருந்தோரை வரவேற்றுப் பேசினர்.

வரவேற்புரையைத் தொடர்ந்து, வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச்சங்கம், பனைநிலத் தமிழ்ச்சங்கம், சார்லட் தமிழ்ச்சங்கம் ஆகியவற்றின் சிறப்பு நிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இவற்றுக்கிடையே, முனைவர் மு.வரதராசனார் அவர்களைப் பற்றி தமிழறிஞர் முனைவர் மறைமலை இலக்குவனார் அவர்கள் நிழல்படங்களுடன் நினைவுகூர்ந்து விரித்துரைத்தார். பினாங்கு துணைமுதல்வர் இராமசாமி பழனிச்சாமி அவர்கள் தமிழர்தம் உரிமைகள் என்பது குறித்து உரையாற்றினார்.

PenangDYChiefMinisterRamasamyPalanisamy

தொடர்ந்து பகடிக்கலைஞர் மதுரை முத்து நிகழ்ச்சி, அட்லாண்டா தமிழ்ச்சங்கத்தின் வீணையிசை, எழுபது கவனகர் கலை.செழியனின் கவனக நிகழ்ச்சி, நியூ இங்கிலாந்து தமிழ்ச்சங்கத்தின் சிலப்பதிகார நாடகம், கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் நடத்திய, “இதயங்கள் இயங்கட்டும்” எனும் தலைப்பில் கவியரங்கம் ஆகியன இடம் பெற்றன. கனடியத் தமிழர் பேரவையின் நாட்டியம் வந்திருந்தோரை வெகுவாக ஈர்த்தது.

ThamizhachiThangapandiyanwriterEssRaa

தமிழ் நாட்டாரியல் ஆராய்ச்சியாளர் பிரண்டா பெக், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் பொன்னவைக்கோ, வாழும்கலைப் பயிற்சி நிறுவனர் ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி ஆகியோரது உரை வீச்சும் விழாவில் இடம் பெற்றிருந்தன.

SriSriRaviShankarji

கலைமாமணி டி.கே.எஸ் கலைவாணன் அவர்களது தமிழிசையில் அரங்கம் திளைத்தது எனச் சொல்வது மிகையாகாது. முதல்நாள் நிகழ்ச்சிகளின் நிறைவாக இடம் பெற்ற ‘வீரத்தாய் வேலுநாச்சியார்” நாட்டிய நாடகம் தனித்துவம் வாய்ந்த நிகழ்ச்சியாக அமைந்தது.

பல்வேறு தமிழ்ச்சங்கங்களின் தமிழ்ப் பண்பாடு சார்ந்த கலைநிகழ்ச்சிகள் பல இடம் பெற்றன. அவற்றினிடையே, தமிழ் மாணவர்களுக்கான தமிழ்த்தேனீ போட்டிகள், தமிழ்ப்பன்முகத் திறன் போட்டி, நாஞ்சில் பீற்றர் அவர்களின் நெறியாள்கையில் ‘இலக்கிய விநாடி வினா’, முதன்முறையாக இடம் பெற்ற ”தமிழன் தமிழச்சி” போட்டி முதலானவை இலக்கியச் சுவையையும் கலைச்சுவையையும் வந்திருந்தோருக்கு ஊட்டியது.

கட்டியக்கலைஞர் சிவகார்த்திகேயன் நடத்திய விவாதமேடையும் பலகுரல் நிகழ்ச்சியும் பெருத்த வரவேற்பை அவருக்குப் பெற்றுத் தந்தன. திரைப்படக் கலைஞர் பரத், அமலா பால் மேடையில் சிறப்புத் தோன்றி கலந்துரையாடினர்.

SivaKarthikeyan

வெள்ளி விழாவினை முன்னிட்டு பேரவையின் முன்னாள் தலைவர்கள் பலருக்குச் சிறப்பளிக்கப்பட்டது. இலந்தை திரு இராமசாமி, முனைவர் சவரிமுத்து முதலானோரின் உரையோடு,  தோழர் நல்லகண்ணு, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், இந்திய ஆட்சிப் பணியாளர் சகாயம் ஆகியோரது சிறப்புரைகள் வெவ்வேறு தலைப்புகளில் இடம் பெற்றன.

sakayamIAS

விழாவினிடையே மலர் வெளியீடு, 2012-2014ஆம் ஆண்டுகளுக்கான நிர்வாகக் குழு அறிமுகம், முக்கிய விருந்தினருக்குச் சிறப்பு, அக்சயா அறக்கட்டளை நிறுவனர் கிருஷ்ணன் அவர்களுக்கு வாழ்நாள் சாதனையாளர் சிறப்பு, தொழில் முனைவோருக்கான சிறப்பு முதலானவையும் இடம் பெற்றன.

writerEssRaaAndMunaivarMaraimalaiIlakuvanaar

’சின்ன குயில்’ சித்ரா, பாடகி அனிதா கிருஷ்ணன் முதலானோர், ஐங்கரன் மெல்லிசை நிகழ்ச்சிக் குழுவினர் நடத்திய மெல்லிசை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தத்தம் பங்களிப்பை நல்கினர். வித்யா வந்தனா சகோதரிகள் பாடிய பாடல் நிகழ்ச்சியும் விழாவில் இடம் பெற்றது.

முக்கிய அரங்கில் இடம் பெற்ற நிகழ்ச்சிகளல்லாது, இணையரங்குகளில் நாட்டாரியல் கண்காட்சி, முன்னாள் மாணவர் சந்திப்பு, தொடர் மருத்துவக் கல்விக்கான கருத்தரங்கம், தொழில் முனைவோர் கருத்தரங்கம், ஸ்ரீ ஸ்ரீ இரவிசங்கர்ஜி அவர்களின் வாழும் கலைப்பயிற்சி முகாம், அமெரிக்க தமிழ்க்கல்விக் கழகக் கூட்டம், திருமண தகவல் சேகரிப்பு நேரம் முதலானவையும் இடம் பெற்றன. 2013ஆம் ஆண்டுக்கான திருவிழா கனடாவில் உள்ள டொரண்டோ நகரில் இடம் பெறுமனவும் அறிவிக்கப்பட்டது.

வெள்ளி விழா வளாகத்தில், “அமெரிக்க தமிழ்த் திருவிழாச் சந்தை” என்கிற பெயரில் வணிக வளாமும் இடம் பெற்றது. இச்சந்தையில், பூக்கடை, நகைக்கடை, துணிக்கடை, புத்தகக்கடை என அறுபதுக்கும் மேற்பட்ட பல்பொருள் அங்காடிகளும் சேவை நிலையங்களும் இடம் பெற்றிருந்தமை விழாவுக்கு வந்திருந்தோருக்குப் பெரும் பயனளிப்பதாக இருந்தது.

வெள்ளி விழாவுக்காக உழைத்த தன்விருப்பத் தொண்டர்கள் அனைவரும் மேடையில் ஏற்றப்பட்டு சிறப்புச் செய்யப்பட்டனர். இப்படியாக நிறைவுற்ற வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையின் வெள்ளி விழாவானது, பெருந்தொகையான மக்கள் கலந்து கொண்ட ஒரு விழாவாகவும், தமிழ்க்கலை, பண்பாடு குறித்த நிகழ்ச்சிகள் செறிவாக அமைந்த ஒரு விழாவாகவும் அமைந்தது

நியூஜெர்சி மாகாணத்தின் அவெனெல் நகரில் உள்ள வுட்பிரிட்ச் அடுக்ககத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கு வருத்தத்தைத் தெரிவித்துக் கொளவதோடு அவர்தம் துயரத்தில் வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் பங்கு கொள்கிறது. இது குறித்து[ பேரவையின் ஓர் அங்கமான நியூஜெர்சி தமிழ்ச்சங்கத்தினரோடு இணைந்து பேரவை செயல்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

Program Schedule

Published in Schedule

 

Download the Program Schedule as PDF

 

வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை

வெள்ளி விழா 2012

         சூலை 6, 2012 முதன்மை அரங்க நிகழ்ச்சி நிரல்

காலை

8:00

மங்கல இசையுடன் நட்சத்திர சந்திப்பு

Mangala Isai and Meet the Stars

காலை

8:20

தமிழ்த்தாய் வாழ்த்து

அமெரிக்க நாட்டுப் பண் 

Tamil Anthem

American National Anthem

காலை

8:26

விளக்கேற்றுதல் - சிறப்பு விருந்தினர்கள்

Lighting the Lamp by  Special Guests

காலை

8:32

வரவேற்புரை- திரு பாலகன் ஆறுமுகசாமி, வெள்ளிவிழா ஒருங்கிணைப்பாளர்

Welcome Address Mr. Balagan Arumugasamy, Silver Jubilee Coordinator

காலை

8:37

வரவேற்புரை -முனைவர். தண்டபாணி குப்புசாமி, தலைவர், வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை

Welcome Address

Dr. Dhandapani Kuppuswamy

காலை

8: 43

தொடக்க விழா சிறப்பு நடனம் வாசிங்டன் தமிழ் சங்கம்

Opening Ceremony Dance

Washington Tamil Sangam

காலை

9:11

முனைவர் மு.வ - சிறப்புரை - தமிழறிஞர் மறைமலை இலக்குவனார்

Dr. Mu. Va Special Address

Prof Ilakkuvan Maraimalai

9:39

மக்கள், மொழி, நிலம் - நடனம், ஹூஸ்டன் தமிழ்ச் சங்கம்

People, Language and Land - Dance - Houston Tamil Sangam

காலை

9:45

விடாதே பிடி! - நகைச்சுவை நாடகம் - பனைநில தமிழ்ச் சங்க நாடகக் குழு

Vidhathey Pidi! - Comedy Drama

Panainilam Tamil Sangam

காலை

10:07

பகடிக்கலைஞர் மதுரை முத்து சிறப்பு நிகழ்ச்சி

Performance by Thiru Madurai Muthu

முற்பகல்

10:22

கவியரங்கம்: இதயங்கள் இணையட்டும் - தலைமை - கவிஞர் தமிழச்சி தங்கப்பாண்டியன்

Poetry - Lead: Mrs. Thamizachi Thangapandian

முற்பகல்

11:25

நாட்டாரியல் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் பிரெண்டா பெக்

Tamil Folklore Dr. Brenda Beck

முற்பகல்

11.38

சிலம்பக்கலை - தென்பாண்டிச் சிலம்பம் - அரசி நகர தமிழ்ச் சங்கம், சார்லெட், வடகரோலைனா

Silambam performance - Then paandi silambam by Charlotte Tamil Sangam

முற்பகல்

11:56

அறிமுகம் - சர்வதேச நிரந்தர வாழ்வாதார அமைப்பு

Introduction - International Sustainable Livelihood Foundation

பிற்பகல்

12:07

பகல் விருந்து

Lunch

பிற்பகல்

1:07

வீணை இசை - அட்லாண்டா பெருநகர தமிழ்ச் சங்கம்    

Veenai by Greater Atlanta Tamil Sangam

பிற்பகல்

1:20

தமிழரின் கவனகக் கலை - கவனகர் முனைவர் கலை.செழியன்

The Tamil Art of Multitasking - Dr. Kalaichezhiyan

பிற்பகல்

2:18

சிலப்பதிகாரம் நாடகம் - நியூ இங்கிலாந்து தமிழ்ச் சங்கம்

Drama - New England Tamil Sangam

பிற்பகல்

2:36

தமிழகத்தில் தாய்த் தமிழ்ப் பள்ளிகள் - சர்வதேச கல்வி நிறுவனம் - திரு குருபரன்

International Educational Foundation- Speech - Mr. Guruparan

பிற்பகல்

2:46

வாழ்த்துரை -   கல்வியாளர் முனைவர் பொன்னவைக்கோ, துணை வேந்தர், எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழகம்

Special Address – Dr. Ponnavaikko, Vice Chancellor, SRM University

பிற்பகல்

2:54

அமெரிக்க தமிழ் கல்விக் கழகம்

American Tamil Academy

பிற்பகல்

3:17

தமிழிசை அரங்கம் - கலைமாமணி  டி.கே.எஸ் கலைவாணன். துணை இசைஞர்கள்: திரு. விக்ரம் ரகுகுமார்-வயலின்; திரு விஜய் கணேஷ் - மிருதங்கம்; திரு பத அஜி - முகர்சிங்; டாக்டர் பாஸ்கர் - புல்லாங்குழல்

Tamil Classical Music Concert by TKS Kalaivanan. Accompanying artists: Mr. Vikram Raghukumar-Violin, Mr. Vijay Ganesh - Miruthangam, Mr. Partha Aji - Mohrsing, Dr. Baskar - Flute

மாலை

4:39

முன்னேர் போற்றல் - வெள்ளி விழாவில் பேரவையின் முன்னாள் தலைவர்களுக்கு மதிப்பளித்தல்

Honoring FeTNA leaders from the past 25 years

மாலை

4:54

தமிழ் தொழில் முனைவோர் மற்றும் சிறப்பு விருந்தினர்களைப் பாராட்டல்

Felicitation of Tamil Entrepreneurs and Special Guests

மாலை

5:17

தமிழர் உரிமை - வெள்ளிவிழா சிறப்பு விருந்தினர் மலேசியத் துணை முதல்வர் பினாங்கு இராமசாமி

Thamizhs’ Rights - Silver Jubilee Special Guest Dr. Ramasamy, Deputy Chief Minister, Malaysia

மாலை

5:50

 

மனித நேயம் - நடனம் - கனேடிய தமிழர்  பேரவை

Humanity - Dance - Canadian Tamil Congress

மாலை

6:18

இரவு விருந்து

Dinner

மாலை

7:18

பேரவை வெள்ளிவிழா மலர் வெளியீடு

Silver Jubilee Souvenir Release

இரவு

7:36

‚ ‚ ரவிசங்கர் சிறப்புரை

Special Address by Sri Sri Ravishankar

இரவு

8:14

உலகத் தமிழர் விழிப்புணர்வு அரங்கம் - பங்கேற்பாளர்கள்

Global Tamil Awareness Forum

இரவு

9:22

பகடிக்கலைஞர் மதுரைமுத்து சிறப்பு நிகழ்ச்சி

Special performance by Thiru Madurai Muthu

இரவு

9:40

வேலு நாச்சியார் - நாட்டிய நாடகம் - ஸ்ரீராம் சர்மா குழுவினர், தமிழ்நாடு.

Velu Nachiyar - Dance Drama by Sri Ram Sarma Troup, Tamilnadu

இரவு

11:07

முதல் நாள் நிகழ்ச்சிகள் நிறைவு

End of First Day Programs

 


 

 

FeTNA Convention - 25th Anniversary Cultural Programs
Day 1 - Friday July 6, 2012

 

 

 

 

 

Item Name

Start Time

Duration

1

Mangala isai & National anthem

8:00 AM

0:20

2

Thamizh thai vaazhthu

8:20 AM

0:05

3

Kutthu viLakku

8:26 AM

0:05

4

Welcome address

8:32 AM

0:10

5

Opening ceremony (Wash TS)

8:43 AM

0:25

6

Dr. Ilakkuvan Marai Malai - Mu Va Speech

9:11 AM

0:20

7

Makkal, Mozhi, Nilam - Houston TS Dance

9:39 AM

0:05

8

Drama - Panai TS - Vidadhe pidi - Comedy drama

9:45 AM

0:25

9

Madurai Muthu - stand-up comedy

10:13 AM

0:15

10

Kaviarangam - hosted by Thamizhachi Thangapandian

10:28 AM

0:45

11

Dr. Brenda Beck - speech on folklore

11:31 AM

0:10

12

Dance - Charlotte TS - Silambam

11:44 AM

0:15

13

Speech - International Sustainable Livelihood Foundation

12:02 PM

0:05

14

** LUNCH **

12:07 PM

1:00

15

Atlanta TS - Veenai isai

1:07 PM

0:10

16

Kalai chezhian - Kavanagam

1:20 PM

0:40

17

Drama - New England TS - Silappadhikaram

2:18 PM

0:15

18

Thai Thamil Palligal - IEF

2:36 PM

0:10

19

Dr. Ponnavaiko speech

2:46 PM

0:05

20

American Tamil Academy

2:54 PM

0:15

21

Tamil Isai - TKS Kalaivanan

3:17 PM

1:15

22

FETNA 25 year Presidents Felicitation

4:39 PM

0:15

23

Felicitation of Special Guests and Entrepreneurs

4:54 PM

0:20

24

Thamizhs’ Rights - Silver Jubilee Special Guest Dr. Ramasamy, Deputy Chief Minister, Malaysia

5:17 PM

0:25

25

Dance - Canada - Manidha Neyam

5:50 PM

0:20

26

** DINNER **

6:18 PM

1:00

27

Malar release

7:18 PM

0:10

28

Sri Sri Ravishankar speech

7:36 PM

0:20

29

Global Tamil awareness Session

8:14 PM

1:00

30

Madurai Muthu - stand-up comedy

9:22 PM

0:15

31

Velu nachiyar dance drama

9:40 PM

1:30

 

Program Ends on Day 1

11:10 PM

 

 


 

சூலை 7, 2012 முதன்மை அரங்க  நிகழ்ச்சி நிரல்

காலை

8:00

மங்கல இசையுடன் நட்சத்திர சந்திப்பு

Mangala Isai and Meet the Stars

காலை

8:30

தமிழ்த்தாய் வாழ்த்து

அமெரிக்க தேசிய கீதம்

Tamil Anthem

American National Anthem

காலை

8:36

குறுங்கதைகள் - பாஸ்டன் தமிழ்ச் சங்கம்

Short Stories by Boston Tamil Sangam

காலை

8:59

கொத்தமங்கலம் சுப்பு 100 - கவிதை - 

இலந்தை திரு. இராமசாமி 

Kothamangalam Subbu 100 - Poem - Ilanthai Thiru Ramasamy

காலை

9: 04

தனி நாயகம் அடிகள் 100 - உரை - பிரான்சிஸ் முத்து

Thani Nayakam Adikal 100 - Speech - Thiru Francis Muthu

காலை

9:09

பாரத மண்ணின் வீரச்சின்னங்கள் - நடனம் - நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம்

Valour - Dance – New Jersey Tamil Sangam

காலை

9:22

பட்டிமன்றம், கரோலைனா தமிழ்ச் சங்கம்

Debate – Carolina Tamil Sangam

காலை

9:40

தமிழ்த் தேனீ - சிறப்பு வினாடி வினா

Tamil Bee - Jeopardy

காலை

10:28

தமிழ் அமிழ்தம் வாழிய செந்தமிழ் நடனம் - வாசிங்டன் தமிழ்ச் சங்கம்

Thamizh Amizhtham & Vaazhiya Senthamizh-Dance-Washington Tamil Sangam

காலை 10:50

தமிழ்த் தேனீ போட்டிகள் - பரிசளிப்பு

Tamil Bee - National Contest Awards

காலை 11:02

இலக்கிய வினாடி வினா - பல்லூடக நிகழ்ச்சி - திரு. பீற்றர் எரோனிமூஸ்

Literary Quiz

காலை

11:40

நாட்டார் நடனம், கரோலைனா தமிழ்ச் சங்கம்

Dance - Carolina Tamil Sangam

காலை

11:52

நியூ ஜெர்சியில் சீமந்தம் - நாடகம் - நியூ ஜெர்சி தமிழ்ச் சங்கம் 

Drama - New Jersey Tamil Sangam

பிற்பகல்

12:15

பகல் விருந்து

Lunch

பிற்பகல்

1:15

இசையும் நடனமும் - நியூ யார்க் தமிழ்ச் சங்கம்

Dance & Music by New York Tamil Sangam

பிற்பகல்

1:38

 

களி நடனங்கள் - வட அமெரிக்கத் தமிழ் இளையோர் அமைப்பு

Kali Dance - North American Tamil Youth Organization

பிற்பகல்

1:56

காவியத் தலைவிகள் - நடனம் - வாசிங்டன் தமிழ்ச் சங்கம்

Kaviya Thalaivikal - Washington Tamil Sangam

பிற்பகல் 2:08

கருத்துக் களம்  "நேற்று, இன்று, நாளை" - நிகழ்த்துபவர் - பல்கலைக் கலைஞர் திரு. சிவ கார்த்திகேயன்

The Debate of Three Generations – Moderated by Mr. Siva Karthikeyan

பிற்பகல் 3:51

காட்டுத் திருவிழா - நடனம் - டெலவர் பெருநிலத் தமிழ்ச் சங்கம்

Jungle Book - Dance - Tamil Association of Greater Delaware Valley

பிற்பகல் 4:09

தமிழன் தமிழச்சி - இளையோர்களுக்கான சிறப்புப் போட்டி

Mr. Thamizh and Ms. Thamizh Contest for Youth

மாலை

5:17

பாடல்கள் -வித்யா&வந்தனா சகோதரிகள்

Songs by Vidhya & Vandhana Sisters

மாலை

5:40

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் சிறப்புரை

Special Address by

Writer Mr. S. Ramakrishnan

மாலை

6:02

நடிகர்கள்  திரு பரத், அமலா பால், சிவகார்த்திகேயன் இவர்களுடன் தொலைக்காட்சி புகழ் பிரியதர்சினி வழங்கும்  நட்சத்திர சிறப்பு நிகழ்ச்சி

Star Time - Actors Mr.Barath, Actress Ms.Amala Paul, and Mr.Sivakarthikeyan with TV Anchor Ms. Priyadharshini

மாலை

6:30

இரவு விருந்து 

Dinner

இரவு

8:00

பேரவை சிறப்பு விருந்தினர் வாழும் வரலாறு தோழர் நல்லகண்ணு அவர்கள், அரசியலாளர், தமிழ்நாடு.

Special Address by Honorable R. Nallakannu, Politician, Tamilnadu

இரவு

8:26

பேரவையின் 2012-2014 செயற்குழு அறிமுகம்

Introduction to FeTNA Board 2012-2014

இரவு

8:44

பாடகர் தாமரைத்திரு சின்னக்குயில் சித்ரா, பாடகர் முகேஷ் பங்குபெறும் ஐங்கரன் இசைக்குழுவின் இன்னிசை மாலை

Light Music by Aingaran Troup. Featuring Sinnakkuyil Chitra and Singer Mukesh

 

தன்னார்வத் தொண்டர்களுக்கு நன்றி நவிலல், 2013 பேரவை விழா அறிவிப்பு

இன்னிசை நிகழ்ச்சி தொடர்ச்சி

Volunteer Recognition, 2013 Convention Announcement, Music Program Resumes

இரவு

10:54

2 ஆம் நாள் நிகழ்வுகள் நிறைவு

2nd Day Programs End

 


 

 

FeTNA Convention - 25th Anniversary Cultural Programs
Day 2 - Saturday July 7, 2012

 

 

 

 

 

Item Name

Start Time

Duration

1

Mangala Isai & Tamil anthem

8:00 AM

0:30

2

Thamizh thai vazhththu

8:30 AM

0:05

3

Kurum kadhaigaL - Boston TS

8:36 AM

0:15

4

Kothamangalam Subbu 100 /Ilanthai Ramaswamy

8:59 AM

0:05

5

Thani Nayagam Adigal 100

9:04 AM

0:05

6

Dance - NJ TS - Bharatha maNNin VeerachinnangaL

9:09 AM

0:10

7

Pattimanram - Carolina TS

9:22 AM

0:10

8

Tamil theni

9:40 AM

0:30

9

Dance - Wash TS - Thamizh Amizhdham & Vaazhiya senthamizh

10:28 AM

0:20

10

Tamil theni awards

10:50 AM

0:10

11

Ilakkiya vinadi vina

11:02 AM

0:30

12

Dance - Carolina TS - Folk dance

11:40 AM

0:10

13

Drama - NJ TS - New Jerseyil Seemantham

11:52 AM

0:15

14

** LUNCH **

12:15 PM

1:00

15

Music + Dance (NY TS) - Nambikkai tharum nallisai & Nilai perum uyar angame

1:15 PM

0:20

16

Dance (YO) - kaLi nadanangaL

1:38 PM

0:10

17

Dance - Wash TS  - Kaaviya ThalaivigaL

1:56 PM

0:10

18

Karuththuk KaLam hosted by Siva Karthikeyan

2:08 PM

1:20

19

Dance - Delaware TS - Jungle Book

3:51 PM

0:15

20

Thamizhan Thamizhachchi

4:09 PM

0:45

21

Vidya Vandana music

5:17 PM

0:10

22

S. Ramakrishnan speech

5:40 PM

0:20

23

STAR TIME - Actor Bharath,Actress Amala Paul with Siva Karthigeyan and TV fame Priyadharshini

6:02 PM

0:20

24

** DINNER **

6:30 PM

1:00

25

Nallakannu Aiya speech

8:00 PM

0:20

26

Introduction of new FeTNA board, volunteers, 2013 FeTNA

8:26 PM

0:10

27

Mellisai  - K.S. Chitra, Mukesh & Ainkaran team

8:44 PM

2:00

 

Program Ends on Day 2

10:54 AM

 

 

registeroninenow

FeTNA 2013 in Toronto

Due to popular demand 10% discount extended till May 15! 

External links are provided for reference purposes. The World News II is not responsible for the content of external Internet sites.
Template Design © Joomla Templates | GavickPro. All rights reserved.